சாய்ந்தமருதுக்கு மற்றுமொரு மட்டற்ற மகிழ்ச்சி, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை "ஏ" தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது


( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்ட உத்தியோகப்பூர்வ கடிதத்தினை கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் இன்று (15) சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம்  மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பீ (B) தரத்திலிருந்து ஏ ( ” A " ) தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் .ஜீ.சுகுணன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

பிராந்திய  சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டொக்டர் .எம்.சீ.எம்.மாஹீர் , பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆரிப் , சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா , அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோஸ்தர்  எம்.சாபி , மாவட்ட மார்பு நோய் தடுப்பு வைத்திய அதிகாரி  டொக்டர் சனூஸ் காரியப்பர் , மலேரியா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.நௌஸாத் ,அபிவிருத்தி சபை  பிரதி தலைவர் எம்.எம்.முபாறக் , செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் , வைத்தியசாலை வைத்தியர்கள் டொக்டர் எம்.ஏ.ஸி.எம்.அமீன் ,டொக்டர் எம்.வகாப் , வைத்தியசாலை தாதி உத்தியோஸ்தர்கள் , வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

1952 ஆம் ஆண்டு சாய்ந்தமருது மத்திய மருந்தகமாக இயங்கிய இவ்வைத்திய பின்னர் மாவட்ட வைத்தியசாலையாக கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது முழுமையாக சேதமடைந்ததால் சாய்ந்தமருது பிரதான வீதிக்கு மாற்றப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

சாய்ந்தமருதுக்கு மற்றுமொரு மட்டற்ற மகிழ்ச்சி, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை "ஏ" தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது சாய்ந்தமருதுக்கு மற்றுமொரு மட்டற்ற மகிழ்ச்சி, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை "ஏ" தரத்திற்கு  தரமுயர்த்தப்பட்டுள்ளது Reviewed by Editor on February 15, 2020 Rating: 5