மட்டக்களப்பு சைவ மங்கையர் கழகம் நடாத்திய "என்றும் மனதில்" இசை நிகழ்வு நேற்று (08) சனிக்கிழமை மாலை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பின் "மீன் மகள் பாடுகிறாள்" பாடலை தந்த கலைஞர் குணம் ஜோசப் அவர்களின் பிரதான பங்குபற்றலுடன், மட்டக்களப்பு பிரதேச முன்னணி இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை இசையால் ரசிக்க வைத்தது.
மட்டக்களப்பில் சாதனை புரிந்த, சமூக சேவையில் பல வருட காலமாக தங்களை அர்ப்பணித்து பணி செய்யும் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன், பேச்சியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் எஸ்.சந்திரகுமார்,சமூக சேவையாளர்கள் குடும்பத்தினை சேர்ந்த தாயார் சீனித்தம்பி லீலாவதி, முன்னாள் சிவானந்தா விளையாட்டு கழகத் தலைவர் சாண்டோ ராஜரெட்ணம் அவர்களுக்கும் கலைஞர் குணம் ஜோசப் மற்றும் மட்டக்களப்பின் இளம் கண்டுபிடிப்பாளர் சக்திகுமார் பிரஜித் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சைவ மங்கையர் கழக இசை நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:




