Sharp kids Montessori மற்றும் NJ Marine (Pvt)Ltd ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று "NO NAME" விளையாட்டு கழகம் இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்திய "NO NAME T10 BLAST NIDAHAS TROPHY-2020" கடின பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் சம்பியனாக சம்மாந்துறை விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டது.
இச்சுற்றுத்தொடரின் ஆரம்ப போட்டி கடந்த சனிக்கிழமை (08) ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று (14) இறுதிப் போட்டி அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நிறைவுற்றது.
இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை எஸ்.எஸ்.ஸி விளையாட்டு கழகமும், அக்கரைப்பற்று ஸ்பார்டன் விளையாட்டு கழகமும் தெரிவானது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய எஸ்.எஸ்.ஸி அணி 10 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்கள்.
அணியின் தலைவர் இஸ்மத் 44 ஓட்டங்களையும், இர்சாத் 15 ஓட்டங்களையும் கூடுதலாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அக்கரைப்பற்று ஸ்பார்டன் அணி சார்பாக முபாரீஸ் மற்றும் அஸ்ஜத் தலா 2 விக்கட்டுக்களையும், நிவாஸ், மஸ்ஊத் மற்றும் சாஹீப் தலா ஒரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
93 என்ற வெற்றி இலக்குக்காக பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று ஸ்பார்டன் அணி தங்களுக்கு வழங்கப்பட்ட 10 பந்துவீச்சு ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றனர்.
ஸ்பார்டன் அணி சார்பாக தலைவர் நிலாஸ் 43 ஓட்டங்களையும், மஸ்ஊத் 23 ஓட்டங்களையும் கூடுதலாகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் எஸ்.எஸ்.ஸி சார்பில் ஆசிக், றமீஸ் மற்றும் பர்சாத் தலா ஒரு விக்கட்டுக்களை கைப்பற்றினார்கள்.
இப்போட்டியில் 3 ஓட்டங்களினால் அக்கரைப்பற்று ஸ்பார்டன் அணியை, சம்மாந்துறை எஸ்.எஸ்.ஸி அணி வெற்றி கொண்டு "NO NAME T10 BLAST NIDAHAS TROPHY- 2020" கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர மேயர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி சம்பியன் அணிக்கான கிண்ணத்தை வழங்கி வைத்துடன்,ரன்னர்அப் ஆக தெரிவான ஸ்பார்டன் அணிக்கான கிண்ணத்தை "NO NAME" விளையாட்டு கழகத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.ஜே. பெளசான் வழங்கி வைத்தார்.
இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சம்மாந்துறை எஸ்.எஸ்.ஸி அணியின் தலைவர் இஸ்மத் அவர்களும், இத்தொடர் போட்டியின் சிறந்த வீரராக ஸ்பார்டன் அணியின் அதிரடி நாயகன் மஸ்ஊத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இச்சுற்றுப்போட்டித் தொடர் சிறப்புற நடை பெற்றமைக்கு சகல வழிகளிலும் உதவிய தமது கழகத்தின் அனைத்து அங்கத்தவர்கள், அனுசரணையாளர்கள், கலந்து கொண்ட விளையாட்டு கழகங்கள் அனைவருக்கும் "NO NAME" விளையாட்டு கழகத்தின் செயலாளர் கே.அஸார் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
"NO NAME" வெற்றிக் கிண்ணம் சம்மாந்துறை SSC வசம்
Reviewed by Editor
on
February 15, 2020
Rating:
Reviewed by Editor
on
February 15, 2020
Rating:










