ஒப்பாரி வைக்கொண்ணாம ஒடஞ்சி கெகெடக்கன் காக்கா, மர்ஹூம் றஹீம் பற்றிய கவிதை துளிகள்


இன்று (15) சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலஞ்சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம் ஏ.எல்.றஹீம் (முன்னாள் ஆசிரியர்) அவர்களின் நினைவாக பதுர்ஸமான் முஸ்தபா அவர்களால் எழுதப்பட்ட கவிதை துளிகள்.


ஒப்பாரி வெக்கொண்ணாம
ஒடஞ்சி கெடெக்கன் காக்கா
ஓவெண்டு அழுதிடாட்டி
நெஞ்சி வெடிக்கும் காக்கா.

எதயம் முழுக்க எரெக்கம் வெச்சி
எப்பயுமே பேசுவேலே காக்கா
எதையும் மறச்சி நீங்க
எனக்கிட்ட பேசல்லயே.
இத மட்டும் ஒளிச்சி வெச்சி
சொல்லாம போனயளே காக்கா!

ஒரே எலையில கை நலச்சி
ஒண்டா சாப்பிட்டவங்க
சந்தர்ப்பம் வாய்ச்சதெண்டு
என்ன சந்திக்கு இழுத்த அண்டு
தனி ஆளா முன் வந்து
என்ர மானம் காத்தயளே காக்கா.

நன்றிக் கடன் தீர்க்க நானும்
எவ்வளவோ கேட்டுப்பாத்தன்.
ஒரு பார்வையால என்ர வாய அடச்சயேலே காக்கா!

அந்த மெல்லிய உள்ளமும் ஈர மனசும்
பதினாறு வருஷம் தாண்டி
இண்டைக்கும் கண்ணுக்க தேங்கி நிக்கி.

எந்தச் சோதனையும் ஒங்கள
ஒருநாளும் பாதிச்சதில்ல
எந்த நெலமையிலும்
நீங்க கண்கலங்கி கண்டதில்ல.
ஒங்குட தங்க மனசு மட்டும்
ஒரு நாளும் கல்லில்ல.
இன்டெக்கி வரைக்கும் அதுக்கு நகல் இல்ல.

என்ர எழப்பிலெல்லாம்
தூணாக நிண்டயலே,
மனசின் பாரமெல்லாம்
எனக்காக சொமந்தையலே.

ஆரும் அழுது வரி அழிஞ்சி போறதில்ல.
ஆதி ரஹ்மான் நமக்கு
அவ்வலில போட்ட வரி.
உம்மா சொல்லக்கேட்டு
கல்பில பதிஞ்ச கவி.

ஒங்குட மௌத்தும் அவன் போட்ட வரிதானே காக்கா!

அந்த மனசின் விசாலம் போல, ரப்புல் ஆலமீன்
ஒங்குட கப்ரயும் வெளிச்சமாக்குவான் காக்கா.
நம்முட நபிகள் பெருமான் ஒங்கள அள்ளி அணைச்சுக்கனும் காக்கா.
அந்த எரக்கம் உள்ள ரஹ்மான்ட மீசான்ல ஒங்குட நன்மையெல்லாம் கதிக்கும் காக்கா!


ஒப்பாரி வைக்கொண்ணாம ஒடஞ்சி கெகெடக்கன் காக்கா, மர்ஹூம் றஹீம் பற்றிய கவிதை துளிகள் ஒப்பாரி வைக்கொண்ணாம ஒடஞ்சி கெகெடக்கன் காக்கா, மர்ஹூம் றஹீம் பற்றிய கவிதை துளிகள் Reviewed by Editor on February 15, 2020 Rating: 5