தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, பாவனையாளர்கள் மீது வைத்து இருக்கும் நல்லெண்ணம் காரணமாக
நாட்டில் நிலவும் வறட்சி நிலை காரணமாக விதிக்கப்படக்கூடிய நீர்வெட்டு குறித்த தகவலை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குறுஞ்செய்தி (SMS) வசதி ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றார்கள்.
நீர் பாவனையாளர்கள் தங்களின் நீர் இணைப்பின் கணக்கு இலக்கங்களை 0719399999 என்ற இலக்கத்திற்கு SMS அனுப்புவதன் ஊடாக இந்த சேவையில் இலவசமாக இணைந்து கொள்ளலாம்.
பொதுமக்கள் தங்கள் மாதாந்த நீர்ப்பட்டியலின் உரிய கொடுப்பனவுகள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து அவசர நீர் வெட்டுக்கள் தொடர்பான முன் அறிவிப்புக்களையும் இந்த சேவையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சேவைக்கு எந்த வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் புதிய SMS செய்தி சேவை அறிமுகம்
Reviewed by Editor
on
February 26, 2020
Rating:
Reviewed by Editor
on
February 26, 2020
Rating:
