4 வர்த்தமானி அறிவிப்புக்கள் வௌியிடப்பட்டுள்ளது


(அரசாங்க தகவல் திணைக்களம்)

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்தும் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிடவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றோடு சுயேட்சை வேட்பாளர் குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பணம் குறித்தும், பாராளுமன்றம் கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டது இதற்கு அமைவாக வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் பொறுப்பேற்கப்படவுள்ளது
என்ற விடயத்தை உள்ளடக்கிய அறிவித்தலே வெளியிட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 வர்த்தமானி அறிவிப்புக்கள் வௌியிடப்பட்டுள்ளது 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் வௌியிடப்பட்டுள்ளது Reviewed by Editor on March 04, 2020 Rating: 5