பட்டதாரிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது இந்தரசாங்கம்!!!


வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 45 ஆயிரத்து 585 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நியமனம் வழங்கலை ரத்து செய்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனைத்து பட்டதாரிகளுக்கான  நியமனங்களையும், பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதையும் நிறுத்துமாறும் தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்கொள்ளவிருக்கும் பொதுத் தேர்தல்களின்போது இந்த வகை ஆட்சேர்ப்பு ஒரு அரசியல் ஊக்குவிப்பாக இருக்கக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் முடிவுறும் வரை அனைத்து அரச நியமனங்கள் மற்றும் ஆட்சேர்ப்புகள் நிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது இந்தரசாங்கம்!!! பட்டதாரிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது இந்தரசாங்கம்!!! Reviewed by Editor on March 04, 2020 Rating: 5