தாய் சேய் சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது


வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் தாய் சேய் சுகாதார நிலையமொன்று இன்று (01) காலை வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். பவானி பசுபதிராஜா அவர்களது தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி நிலையத்தை  திறந்து வைத்தார்.

சுமார் இருபது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சுகாதார நிலைய திறப்பு நிகழ்வில், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு கே.தெய்வேந்திரன், வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் திரு. ரி.திரேஸ்குமார்,
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் திரு.கே.சிவாகரன், வெங்கலச்செட்டிகுளம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.வி.சுரேந்திரன் ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தாய் சேய் சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது தாய் சேய் சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on March 01, 2020 Rating: 5