ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்று (11) கொழும்பில் பிரதமர் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் காதர் மஸ்தான் அவர்கள் உரிய பத்திரத்தில் ஒப்பமிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரகடனம் செய்யப்பட்டார்.
இந் நிகழ்வில் நாடு முழுவதற்குமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற தேர்தல் 2020 ற்கான தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்
Reviewed by Editor
on
March 11, 2020
Rating:
Reviewed by Editor
on
March 11, 2020
Rating:
