பழைய நிலைக்கு திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கைகள்


கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வருபவர்களை, விமான நிலையத்திற்குள் அனுமதிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட உத்தரவு இன்று (06) முதல் தளர்த்தப்பட்டு வழமையான நிலைக்கு வந்துள்ளது என விமான நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி விமான நிலையகத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள வரவேற்று பகுதியில் ஒரு விமான பயணியுடன் ஒரு அதிதிக்கு மாத்திரம் வருகை தரமுடியும்.

இதற்காக 300 ரூபா பெறுமதியான நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்வது அவசியமாவதுடன், அந்த பீடங்கள் இன்று காலை முதல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பழைய நிலைக்கு திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கைகள் பழைய நிலைக்கு திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கைகள் Reviewed by Editor on March 06, 2020 Rating: 5