நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் நேற்றிரவு (09) திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.மற்றும் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கெக்கிராவையைச் சேர்ந்த அஸீஸ் என்பவரே இச்சமயத்தில் படுகொலை செய்யப்பட்டவராவார்.
வேனில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் வெட்டிக் கொலை செய்தபின்னர் தப்பிச் சென்றுள்ளனர். ஹோட்டல் ஊழியர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரூவதுடன் குறித்த இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்
Reviewed by Editor
on
March 10, 2020
Rating:
Reviewed by Editor
on
March 10, 2020
Rating:


