அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி, SSDP திட்டத்தின் கீழ் தெரிவு


தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் இயங்கும் தொழில் நுட்பவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் தொழில் வழிகாட்டல் ஆலோசனை மத்திய நிலையங்களினூடாக நடைமுறைப்படுதப்படும் செயற்திட்டங்களுக்கான நிதி அனுசரனையானது Skill sector development programme (SSDP) மூலமாக வழங்கப்படுவது வழமையானதாகும்.

இதன் படி, 2020ஆம் கல்வியாண்டில் மேற்குறித்த திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் 20 கல்லூரிகளே தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுள் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல், ஆலோசனை மத்திய நிலையம் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் திறன்பட செயற்பட்டமையினால் இவ்வாண்டும் SSDP திட்டத்தின் கீழ் இக்கல்லூரி உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி, SSDP திட்டத்தின் கீழ் தெரிவு அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி, SSDP திட்டத்தின் கீழ் தெரிவு Reviewed by Editor on March 10, 2020 Rating: 5