கொறனாவும் - கொறயும்


(எம்.எச்.முஸ்தாக் முஹம்மட் - சுதந்திர ஊடகவியலாளர்)

உலக எல்லைகளிலிருந்து தங்களது எல்லலைகளை பாதுகாக்கவென்று செய்யப்பட்ட ஆயுதங்களையும் போர்க்கப்பல்களையும் அடுக்கிவைத்து அழகு பார்த்து மார்தட்டி பிரகடனப்படுத்தி வந்த சிந்தாந்தங்களும் தத்தவங்களும் இன்று மனிதனை மேலும் தொடரும் வைரஸை துடைத்தெறியவே முடியாமல் தள்ளாடிக்கொண்டு அமைதியற்ற உலகில் தரிசித்து நிற்கிறது.

இரத்தம் சிந்தா யுத்தம் இல்லா தேசம் கிடைத்தவிட்டது என்ற சந்தோச மனதில் அலைந்து திரிந்து சேர்த்த சேர்வைகளையும் திண்டு விட முடியாதவாறு ஒழித்து தள்ளி மறைந்து தனியே வாழச்சொல்கிறது வைரஸ்.

மனிதனையும் சொந்தங்களையும் விரசிவிட்டு ஓயாமல் உழைத்து சேர்த்து கடைசி வரை வாழ நினைத்தவர்களை கொறனா கொறையாக வாழச்சொல்கிறது. தனித்திரு ஆனால் தள்ளியிரு என்கிறது என்பதில் எதனைப்புரிந்து விடடோம்

தன்னைத்தானே நேசித்து தன்னைத்ததானே வெறுத்து தங்கள் சொந்தங்களோடு தன்னால் வாழ முடியாது. நெருங்கவோ பார்க்கவோ கட்டிப்பிடிக்கவோ ஏன் கையே கொடு;க்கவே முடியாது வாழ்க்கை என்ன இது! மரணத்தை வென்று மண்ணில் வாழ்வதாய் எண்ணிக்கொள்ளும் வாழ்வு பற்றி சிந்திந்துப்பார்.

சர்வதிகாரமும் சர்வ வல்லமைகளையும் தன்னகத்தே வைத்துக்ககொண்டு உலகநாட்டையே ஆட்டிப்படைத்த வல்லரசுகளும் உலக நாட்டையே கைக்குள் வைத்திருந்த வெளிநாட்டுத்தலைமைகளும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் நாம் மாத்திரம் எம்மாத்திரம்.

இலங்கை அரசின் தளபதி தனது அயராத முயற்சியினால் வைரஸ் தொற்றை தொற்றாமலே கலைத்து விடும் மிகப்பெரும் முன்னோடி நடவடிக்கைகளை அயராது மேற்க்கொண்டு வருகின்றார்.

அதற்கு முப்படையினரும் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார உத்தியோகத்தர்களும் அரச உத்தியோகத்தர்களும் ஊடகவியலாளர்களும் சமூக இயக்க மனிதபிமானம் உள்ள மனிதர்களும் மத கலாச்சார நிறுவனத்தலைவர்களும் உள்ளுராட்சி அதிகாரசபைகளும் மக்களுக்குள் நின்று மக்களை கொல்லும் வைரஸை அகற்றி மக்களை காப்பாற்றிவிடும் மிகப் பெரும் சிரமத்தை தங்கள் உயிர்களை துச்சமென மதித்து; தன்னந்தனியாக சந்திகளிலும் வீதிகளிலும் அலைந்து திரிகிறார்கள் என்பதை நாம் உணர்ந்தும் மறக்கத்துடிப்பது ஏன்?

ஊரை அடக்கி மக்களை கலைத்து ஆறஅமர வைத்து கொறனாவுக்குள் நொருங்கிப்போய்விடாது மக்களை காத்து வரும் வேளையில் நாம் மாத்திரம் நமது சுயநலன் சார்ந்த சிந்தனையில் இருந்து மீண்டு நமது சமூகம் சார்ந்து மாத்திரம் நின்றுவிடாது இலங்கை உலக வாழ் மக்களுக்குமான பிரார்த்தனைகளாக நாம் நம்மை மாற்ற வேண்டும்.

இதனைத் தவிர்த்து வலயத்தலங்களில் இனத்துவ அரசியல் சார்ந்த கருத்தியல்களை வைத்து கறைபடிந்து போன மனங்களில் வக்கிரத்தை கருத்தில் வடித்து உங்கள் மானமுள்ள றோசமுள்ள மனித மூளைச்சலவைகளை மாற்றாருக்கு கூலிக்கு கொடுத்து உன் முக அழகை சிதைத்துவிடுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

நிவாரணங்கள் என்ற போர்வைகளால் தங்களை போர்த்திக்கொண்டு வெளிநாட்டிலும் ஊள்ளுரிலும் தேடிய தேட்டத்தால் கொடுத்த பணங்களை உங்களுக்கு ஏற்ற வகையிலும் நீங்கள் சார்ந்த இயக்கநலன்களின் பின்னால் நின்று சிந்திப்பதை கைவிடுங்கள்.!!

அவர்களின் பணங்களை பயனுள்ள செலவின் நன்மைகளாக அவர்களுக்குத் தேடிக்கொடுங்கள்.

இல்லாதவர்கள் என்பது கரையோரத்திலும் வயல்வெளியின் நடுவிலும் வாழ்பவர்கள் மாத்திரமல்ல உனக்குள்ளும் வாழ்கிறார்கள். நீயும் உன் அயலவர்களும் இருப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அக்கரைப்பற்று குடியிருப்பில் 03 வீட்டில் நெருப்பெரியவில்லை என்று பல இயக்கவியலில் பேஸ்புக்கில் போட்டோ போட்டு நிவாரணம் வழங்கியவர்களின் தொலைபேசிக்கு வாய் எழுத்து மூலமும் பேஸ்புக்கிலும் அறிவித்தும் எவ்வித பலனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற கசப்பான உண்மையை இவ்விடத்தில் கூறத்தான் வேண்டும்.

 சொல்வதைத்தவிர வேறுவழியில்லை அக்கரைப்பற்று குடியிருப்பையும் தாண்டி ஆலங்குலம் என்ன அலிக்கம்பைக்கும் நிவாரணம் சென்று விட்டது.

இவைகளை விட்டு விட்டு பொதுவான அமைப்பாக மாறவேண்டும் அனைத்து இயக்கங்களும் பள்ளிவாசல் தலைமைகளும் வட்டார அரசியல் தலைவர்களோடும் மாநகர பிதாக்களுடன் ஊரின் தலைமகன் என எல்லோரும் உள்ளீர்க்கப்பட்டு எல்லோரும் சேர்ந்து பட்டியல்களை தயாரித்து நிவாரணம் சேகரிக்க வழங்க பொதுவான கட்டமைக்கப்பட்ட கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இது யாருக்கோ காசு கொடுப்பது யாரிடமாவது நிவாரணம் கொடுங்கள் எனச்சொன்னால் அவரிடமா கொடுத்தீர்கள் அவரா? இவரா? எவர்ரா? ஆனால் பொது வெளியில்; நிவாரணப் பணிகளை அரசியல்வாதிகள் புகழேந்திகளை தவிர்த்து சமூகப்பணி தொடரும் இளைஞர்களைக்கொண்டு வழங்கவேண்டும்.

மூடிய அறைக்குள் நடக்கும் அரசியல் சமூக கலாச்சார பித்தலாட்டங்கள் சிலரின் முகங்கள் எல்லாம் வெளிப்படும் இதிலிருந்தும் சமூக தலைமை தலைதூக்கும் இதனை விட்டு விட்டு காசு சேர்த்து வியர்வை சிந்தி மக்களுக்கு சேவைசெய்ய ஒரு கூட்டம் மக்களின் வாக்குகளை வாங்கி எடுக்க இன்னொரு கூட்டம் இது தேவைதானா??

தலைமைகளே!! வட்டார தலைமைகளிடம் அவர்கள் பிரதேச மக்களின் பட்டியலை கேட்டுப்பாருங்கள் தருவார்களா?? அவர்களுக்கு தெரியவே தெரியாது.

இவைகளை எப்போது செய்வது? யார் செய்வது? பிரிவுகளால் பிரிந்து கொண்டு வலையத்தல மீடியாக்களில் கூவி பேட்டி கொடுத்து எதனை சாதிக்கப்போகிறோம். தனித்திரு என்றால் கூடப்பார்க்கிறோம். வீடடிற்குள் இரு என்றால் வீதிக்கு வந்து பார்க்கிறோம். பின்னர் கொறனா என்றால் தள்ளிநிற்கிறோம். மரணித்த உடலை பாரமெடுப்பது யார்?? புதைத்தார்களா?? எரித்தார்களா?? ஜம்மியத்துல் உலாமிடம் வீட்டிற்குள்ளிருந்து கேள்வி கேட்கும் இளைஞர் பட்டாளமே இதுதானா சமூகம் இதுதானா பிரச்சினைக்கு தீர்வுகள்.

சிந்தியுங்கள் கொறானவுக்குள்ளிருக்கும் வைரஸை தொலைத்துவிட்டு நமது கொறைகளை நமக்குள்ளேயே தெலைத்துவிட்டு தீர்வுகளுக்கான வழி தேடுவோம். நாம் நாமாகவே வாழவேண்டும்.

கொறனாவும் - கொறயும் கொறனாவும் -  கொறயும் Reviewed by Editor on March 31, 2020 Rating: 5