முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுத்து மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாணத்தில் திறக்கப்பட்ட லங்கா சதொச கிளைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
நகரங்களில் மட்டும் வரையறுக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் கிளைகளை கிராமங்கள் வரை கொண்டு சென்று இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும், தற்போது சதோச நிறுவனத்தின் கிழக்கு மாகாணங்களில் உள்ள கிளைகளில் பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதனால் இந்த முடிவை அரசு எடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கிளைகள் மூடப்பட்டாலும் அங்கு பணி புரிந்தவர்கள், தலை நகரங்களில் உள்ள கிளைகளில் கடமை புரிவதற்கான ஏற்பாடுகளையும் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகணத்தில் மூடப்படுகின்றதா சதொச நிறுவனங்கள்????
Reviewed by Editor
on
March 05, 2020
Rating:
Reviewed by Editor
on
March 05, 2020
Rating:
