பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு வாழ் மக்கள் அதாஉல்லாஹ்வினை ஏன் ஆதரிக்க வேண்டும் என்கிறார், அரசியல் விமர்சகர் சீனி முஹம்மட் தல்ஹா!!!
கிழக்கு மாகாண மக்களின் வாழ்வும் அரசியலும் பல் வேறு வகையான ஒற்றுமை வேற்றுமைகளை கொண்டு காணப்படுகிறது.
இந்த மாகாணம் கடந்த காலங்களில் யுத்தத்தினால் பல அழிவுகளை சந்தித்தது மாத்திரமல்ல 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் முதன்மையாக பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதனையும் நாம் அறிவோம்.
தற்போது உருவாகியுள்ள பொருளாதார மந்தநிலை கிழக்கு மக்களின் வாழ்வினை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் மூவின சமூகங்களிலும் வறுமை முன்பிருந்ததனை விட அதிகரித்து நாளாந்த வாழ்வினை ஓட்டுவதில் மக்கள் அல்லல் கொண்டு காணப்படுகின்றனர்.
இந்த நிலை உருவாக பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்திய போதும், பிரதான காரணியாக அரச வளப்பங்கீட்டில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வு மற்றும் புறக்கணிப்பு என்பதனை சுட்டிக் காட்ட முடிகிறது.
ஒரு ஜனநாயக நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் வினைத்திறனுடன் இயங்க வேண்டுமெனில் அங்கு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் ஆளுமைமிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.
கடந்த இரு தசாப்தத்தில் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வை விட ஆளுமை மிக்க அரசியல் பிரதிநிதியை நாம் காணவில்லை. அவருக்கிருக்கின்ற அரசியல் அனுபவம், இம்மாகாணத்தில் அவர் கொண்டுள்ள கரிசனை இந்த மாகாணத்தின் சமூக ஏற்றத்தில் விரைவான அபிவிருத்தியை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.
கிழக்கு மாகாணத்தில் சிறிய பிரச்சினைகள் வங்குரோத்து அரசியல் வாதிகளால் கடந்த காலங்களில் தோற்றுவித்தபோதும், நிலையான சமூக உறவுகளுக்காக தன்னை அர்ப்பணித்த அரசியல் பிரமுகராக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வை இந்த சமூகம் பார்ப்பதை அவதானிக்க முடிகிறது.
சமூகங்களுக்கிடையில் சந்தேகமற்ற உறவு ஏற்படுமென்றால் நமது பொருளாதாரமும் வாழ்வும் சிறப்பானதாக மாறும்.
இன, மத பேதங்கள் கடந்து எதிர் வரும் பொதுத்தேர்தலில் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு 1932ம் ஆண்டில் தர்மரத்ன வன்னியரை அரசாங்க சபைக்கு அனுப்பியது போல் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வினை பாராளுமன்றம் அனுப்புவதே நமது அனைவரினதும் தலையாய கடமையாகும்.
இப்போது இருக்கின்ற சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பிரமுகர்களில் பேரினவாத சமூகத்தவர்களால் தவறாக விமரசிக்கப்படாத ஒரு நபராக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்வே காணப்படுகின்றார்.
அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்காக சாத்தியமான வழியில் பணிசெய்யக் கூடிய வேட்பாளராக இன்று எம் கண்முன் அவரின்றி வேறு நபர்கள் இல்லை.
எமது எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்வது காலத்தின் தேவையாக இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு வாழ் மக்கள் அதாஉல்லாஹ்வினை ஏன் ஆதரிக்க வேண்டும் என்கிறார், அரசியல் விமர்சகர் சீனி முஹம்மட் தல்ஹா!!!
Reviewed by Editor
on
March 05, 2020
Rating:
Reviewed by Editor
on
March 05, 2020
Rating:
