மாடு குறுக்கிட்டதனால் வேன் மரத்தில் மோதி விபத்து


இன்று (8) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த வேன் மூதுார் இறால்குழிப்பாலத்திற்கு (உப்புக்காச்சி மடு) முன்னால் மாடு ஒன்று குறுக்கிட்டதன் விளைவாக விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-

அக்கரைப்பற்று மன்பாஹூல் கைறாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் கந்தளாய் மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த 5 மாணவிகள் தங்களது விடுமுறை முடிந்த பின்னர் கல்லூரிக்கு இன்று (8) வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போதே இந்த துக்ககரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் பயணம் செய்த மாணவிகளில் மூவரும், வாகன சாரதியும்  சிறுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு மூதுார் தளவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாடு குறுக்கிட்டதனால் வேன் மரத்தில் மோதி விபத்து மாடு குறுக்கிட்டதனால் வேன் மரத்தில் மோதி விபத்து Reviewed by Editor on March 08, 2020 Rating: 5