வலய மட்ட உயரம் பாய்தல் போட்டியில் ஸஹ்றா மாணவி முதலிடம்


அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற வலயமட்ட விளையாட்டு போட்டியின் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் உயரம் பாய்தல் போட்டியில் தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலய மாணவி எம்.எப்.லீனா முதலிடம் பெற்று மாகாண போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (04) புதன்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியிலயே இம்மாணவி இந்த சாதனையை புரிந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.

பாடசாலை அதிபர் ஜனாப். முஹம்மட் பைறுஸ் அவர்களின் வழிகாட்டலில் இப்பாடசாலை தற்போது கல்வி மற்றும் விளையாட்டு போன்ற இதர விடயங்களில் பாரிய முன்னேற்றமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வலய மட்ட உயரம் பாய்தல் போட்டியில் ஸஹ்றா மாணவி முதலிடம் வலய மட்ட உயரம் பாய்தல் போட்டியில் ஸஹ்றா மாணவி முதலிடம் Reviewed by Editor on March 04, 2020 Rating: 5