(அப்ரா அன்ஸார்)
போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக போராடும் ஊடக கல்வியறிவை ஊக்குவிக்கும் முகமாக இளம் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று (03) செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.
"போலி செய்தி உலகத்திற்கான சரியான ஊடக கல்வியறிவு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த செயலமர்வானது Srilanka Development Journalist forum மற்றும் Center for Media and information Literacy ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன், அதன் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த செயலமர்வின் வளவாளராக அமெரிக்க ஊடகவியலாளரான Jessi Hollis McCarthy அவர்கள் கலந்து கொண்டு மிகவும் பல தரப்பட்ட விடயங்களை குறிப்பிட்டார்கள்.
SDJF மற்றும் CMIL ஏற்பாட்டில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற ஊடக செயலமர்வு
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:




