( எம்.எஸ்.எம்.நூர்தீன்)
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக் கைதிகள் நேற்று முன்தினம் (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் . எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்
கோரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைசாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்த சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்மாந்துறையைச் சேர்ந்த 21, பேரையும், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரையும், கல்முனையைச் சேர்ந்த 12 பேரையும், மட்டக்களப்பைச் சேர்ந் 44 பேரையும் , ஏறாவூரைச் சேர்ந்த 39 பேரையும், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 19 அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரையும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 162 சிறைக்கைதிகளையும் முதற்கட்டமாக விடுவிக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 162 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
