மலேசியாவில் கோவிட்-19 தொற்றுநோய் குறையத் தொடங்கியுள்ளது


நேற்று (20) மலேசியாவில் 36 பேருக்கு மட்டுமே கோவிட்-19 நோய் தொற்றுகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது மலேசியாவில் இந்த தொற்று குறைந்து வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு,நேற்று இறப்பு சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்றும் மலேசியா செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 சம்பவங்களை கட்டுப்படுத்த மலேசிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், மலேசிய மக்களின் அபரிதமான ஒத்துழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் ஆகும்.

கோவிட்-19னால் பாதிக்கப்பட்ட 5,425 பேர்களில் 3197 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதோடு,மீதி உள்ளவர்களில் கவலைகிடமாக யாரும் இல்லை என்பதால் விரைவில் அவர்களும் குணமடைவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக இந்த தொற்றுகளை மக்களிடையே பரவாமல் பார்த்து கொண்டால், விரைவிலேயே மலேசியா கோவிட்-19 நோயிலிருந்து விடுபட்ட நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என்று மலேஷியா அரசாங்கம் அந்நாட்டு மக்களை கேட்டுள்ளது.

உலக அளவில் கோவிட்-19னால் பாதிக்கப்பட்ட எந்த நாடும் அதிலிருந்து விடுபட்டுள்ளதாக இன்னும் உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(மலேசிய செய்திகள்)
மலேசியாவில் கோவிட்-19 தொற்றுநோய் குறையத் தொடங்கியுள்ளது மலேசியாவில் கோவிட்-19 தொற்றுநோய் குறையத் தொடங்கியுள்ளது Reviewed by Editor on April 21, 2020 Rating: 5