உலகில் 20 இலட்சத்தை தாண்டியது


உலகளவில் கொரோனோ வைரஸின் பாதிப்பு 20 இலட்சத்தை தாண்டியுள்ளது என சர்வதேச செய்திகள் சுட்டிக் காட்டுகிறது.

சீனாவில் ஆரம்பித்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகிலுள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை பறித்து வருகிறது. உலகளாவிய ரீதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியது.

இதன் பாதிப்பால் 126,754 பேர் உயிரிழந்தும்,484,594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மாத்திரம் சுமார் 612,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 26,064 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் 20 இலட்சத்தை தாண்டியது உலகில் 20 இலட்சத்தை தாண்டியது Reviewed by Editor on April 15, 2020 Rating: 5