Covid-19 பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது!!!


கொவிட் 19 பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றி இலகுவான விளக்கங்களை அறியலாம்.

உலகளவில் பல பரிசோதனை முறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக "Nasopharyngeal swab technique" பயன்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனத்தால் NAAT test (Nucleic Acid Amplification Test) என அழைக்கப்படுகிறது.


விஞ்ஞான விளக்கம்:
Virus களின் அடிப்படை பிறப்புரிமை பதார்த்தம் RNA ஆகும். அதாவது மனிதனில் DNA கள் காணப்படுவது போல வைரசுக்களில் RNAகள் காணப்படும். இவை உடலினுள்ளோ அல்லது உயிருள்ள அங்கியினுள்ளோ செல்லும் போதே இவற்றின் செயற்பாடு ஆரம்பிக்கும். அதாவது ஒரு விதையினை வெளியில் வைத்தால் வளராது. மாறாக மண்ணினுள் புதைத்து நீரூற்றினாலே வளர்ச்சியடையும். அதே போல இந்த கொரோனா வைரசுக்களும் உரிய நிபந்தனைகள் கிடைக்கும் போது வளர்ச்சியடையும்.

NAAT Test:
இந்த பரிசோதனையில் பயன்படுவது Nasopharyngeal swab எனப்படும் cotton buds போன்ற எளிய கருவி.இதனை பொதுவாக மூக்குக் குழியின் அடியில், அதாவது தொண்டைக்குழியின் ஆரம்ப பகுதியில் (மூக்குக் குழியிலிருந்து 2/3 cm தூரத்திற்கு செலுத்தப்படும்) இந்த swab யினை செலுத்தி தன் அச்சு பற்றி சுழற்றிய பின் வெளியில் எடுக்கப்படும். இதனை 2 மூக்குத் துவாரங்களினூடகவும் செலுத்தி sample பெறப்படும். பெறப்பட்ட sample கள் RT- PCR test ற்காக எடுத்துச் செல்லப்படும்.

RT-PCR Test:
  • RT: Reverse Transcription
  • PCR: Polymerase Chain Reaction

RT எனப்படுவதன் விளக்கம் என்னவென்றால், ஏற்கனவே சொல்லப்பட்டது போன்று வைரசுக்கள் RNA களை கொண்டவை. இவற்றை இனப்பெருக்கம் செய்வதோ அல்லது Replication(பிரதியெடுத்தல்) செய்வதோ இலகுவானது அல்ல. அதற்கு இந்த RNA களை DNA களாக மாற்றவே இந்த Reverse transcription எனும் தொழிநுட்பம் பயன்படுகிறது.
மாற்றப்பட்ட DNA கள் PCR எனும் படிமுறைக்கு கொண்டு செல்லப்படும். இதில் DNAகள் உருப்பெருக்கப்படும். அத்தோடு பரிசோதனை கூடத்தில் covid 19 ற்கான பிறப்புரிமை பதார்த்தத்தின் Transcribe செய்யப்பட்ட DNAகளின் Sample வைக்கப்பட்டிருக்கும்.

பெறப்பட்ட sampleன் அளவு சிறியதாகையால் அவற்றினை Amplification செய்யப்படும். அதாவது உதாரணமாக, 100 DNAகள் காணப்படுமானால் அவற்றை 1000 ஆக எண்ணிக்கையில் அதிகரிக்கப்படும். இதனால் COVID 19 வைரசுக்கள் காணப்பட்டால் இவ்வாறு PCR பரிசோதனை மூலம் amplify செய்வதால் இலகுவாகவும் குறுகிய நேரத்திலும் அடையாளம் காணலாம். Amplify செய்யப்பட்ட மாதிரியில் ஏற்கனவே கூடத்தில் உள்ள covid 19 வைரசுக்களின் மாதிரியுடன் ஒப்பிட்டு குறிப்பிட்ட நபர் தொற்றுக்குள்ளானவரா இல்லையா என்பதை இனங்காணலாம்.

இலங்கையில்:
இலங்கையில் தற்போது இந்த RT- PCR பரிசோதனை பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திலேயே (Medical Research Institute) இடம்பெறுகின்றது. பெறப்பட்ட sampleஆனது நிறுவகத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். இந்த sampleகள் 02 வகையின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகிறது.

  • குறிப்பிட்ட sample கொரோனா தொற்றுக்கு உள்ளாகிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளவரா...
  • தொற்றுக்குள்ளாகி மருத்துவ பரிசோதனையில் உள்ளவரா...

என்ற அடிப்படையில் sampleகள் கையாளப்படும். ஏற்கனே தொற்றுக்கு உள்ளானவரின் மாதிரிகளின் பரிசோதனைகளுக்கு முன்னர், தொற்றுக்கு உள்ளான நாட்களின் எண்ணிக்கை மற்றும் ஆரம்ப நோய் அறிகுறிகள் பற்றியும் தற்போது உள்ள நோய் நிலைமை பற்றிய அறிக்கைகளும் ஆராயப்பட்ட பின்னரே நோய் நிலைமையின் தீவிரம் அறியப்படும்.

அதே நேரம் corona வைரசுடன் சேர்த்து Influenza RSV, Adeno virus மற்றும் 21 வகையான சுவாசப் பாதையை தாக்கும் வைரசுக்கள் இருக்கின்றனவா என்பது பற்றியும் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள குறைந்த மற்றும் வரையறுக்கப்பட்ட சோதனை கருவிகள் காரணமாக 6-24 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட நபர் தொற்றுக்குள்ளானவரா இல்லையா என்பது வெளியிடப்படும்.

S.F அன்சப் அரீஜ்
உயிர் மருத்துவ பொறியியல் மாணவன்
2ம் வருடம்
Covid-19 பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது!!! Covid-19 பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது!!! Reviewed by Editor on April 15, 2020 Rating: 5