2020ம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீதம் வீழ்ச்சி - ஐ.நா சபை தெரிவிப்பு


2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் ஒரு சத வீழ்ச்சியைக் காணுமென ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இம்முறை இரண்டரை சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை முன்னர் எதிர்வு கூறியிருந்தது.

எனினும், கொரோனா வைரசின் தாக்கத்தை அடுத்து உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய எதிர்வுகூறலை ஐக்கிய நாடுகள் சபையின் சமூக பொருளாதார அலுவல்களுக்கான பிரிவு மாற்றி அமைத்துள்ளது.

இந்த ஆட்கொல்லி நோயானது உலக விநியோக சங்கிலிகளையும், சர்வதேச வர்த்தகத்தையும் சீர்குலைத்துள்ளதாக மேலும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2020ம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீதம் வீழ்ச்சி - ஐ.நா சபை தெரிவிப்பு 2020ம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஒரு சதவீதம் வீழ்ச்சி - ஐ.நா சபை தெரிவிப்பு Reviewed by Editor on April 05, 2020 Rating: 5