பெரியகாடு, பூனானை மற்றும் விமானப்படையினால் நிர்வாகித்துவரும் பூவரசங்குளம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ள 321 பேர் நேற்று காலை (31) ஆம் திகதி இராணுவத்தினரது போக்குவரத்து வசதியுடன் மருத்துவ அதிகாரிகளின் பரிசோதனையின் பின் தரமான சான்றிதழ்களுடன் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்த காலி, கொழும்பு, கண்டி மற்றும் குருநாகல் பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் இராணுவ போக்குவரத்து வசதிகளுடனும்சிற்றூண்டி வசதிகள் வழங்கி வைத்து இவர்களை அவர்களுக்கு உரிய இடங்களிற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் இந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இந்த நபர்களை பார்வையிடுவதற்கு கட்டளை தளபதிகள் இந்த இடத்திற்கு வருகை தந்து இவர்களை வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தனிமைப்படுத்த நிலையங்களிலிருந்த 321 பேர் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதி
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:

