(மருதமுனை நிஸா)
பாராளுமன்றத் தேர்தல்
பிந்திப்போனது ஏனது?
இறைவன் தடுத்தது தானது
அவன் நடத்தும் தேர்தல் இது
புரியுதா உமக்கிது?
சர்வதேச தேர்தல் இது
சர்வத்தையுமே அடக்கி யாழுது
இறைவன் இட்ட நாட்ட மிது
பொறுமையாய் கையாழுவது
உமக்கிது சிறந்தது
மெது மெதுவாய் தொடங்கியது
இத் தேர்தல் முறையானது
ஒவ்வொன்றாய் மேயுது
ஊர்வலமாய் வருகிறது
தேசா தேசமெல்லா மிது
விறுவிறுப்பாய் நடைபெறுகிறது
தேர்தல் களம் களை கட்டுகிறது
வாக்குகள் சாவடிகளில்
எரிக்கப்படுகிறது புதைக்கப்படுகிறது
பலவிதமாய் அழிக்கப்படுகிறது
வெறுப்பு வாக்குகளும் இருக்கிறது
விருப்பு வாக்களும் இருக்கிறது
இறைவன் வாக்குப்படி போகிறது
உயிர் மை அடித்து அனுப்ப படுகிறது
இதில் ஒதுக்கீடுகளும் நடக்கிறது
வாக்குகள் உடனுக்குடன்
எண்ணி பெறுபேறுகளும்
தாமதமின்றி வெளிவருகிறது
அங்கே இத்தனை
இங்கே இத்தனை என்றும்
மாவட்ட மாவட்டங்களாகவும்
நாடு நாடாகவும் வாக்குகளின்
எண்ணிக்கை பிரித்து
விகிதாசாரமாய் முடிவுகள்
வெளிவருகிறது
கொரோனா தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஊடகங்கள்
பகிருகின்றது
முடிவுகள் காதுகளை எட்ட எட்ட
இதயங்களின் லப்டப் ஒலி
பூகம்பமாய் வெடிக்கிறது.....
இதுவும் ஓர் தேர்தல்தான்!!!
Reviewed by Editor
on
April 10, 2020
Rating:
Reviewed by Editor
on
April 10, 2020
Rating:
