நீர்த் தடை பற்றிய அறிவித்தல்



தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்திற்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது பிரதேசங்களில் இன்று (09) முதல் மறு அறிவித்தல் வரை காலை9.00 மணி தொடக்கம் காலை 11.00 மணி வரையும், மீண்டும் மாலை 3.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரைக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் நீர்  தடைப்பட்டிருப்பதனால், நீர்ப்பாவனையாளர்கள்,நீரினை சேமித்து மிகச் சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

(MBM.றின்ஸான்)
நீர்த் தடை பற்றிய அறிவித்தல் நீர்த்  தடை பற்றிய அறிவித்தல் Reviewed by Editor on April 09, 2020 Rating: 5