ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், கொவிட் நோயாளர்கள் - உண்மைக்குப்புறம்பான செய்தி, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை


(அரசாங்க தகவல் திணைக்களம்)
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 கொவிட் நோயாளர்கள் இருப்பதாக உண்மைக்குப பறம்பான செய்தி வெளியிட்டவர்களுககெதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில்  2ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இது தொடர்பாக தெரிவிக்கையில்-
நாம் கொவிட் நோய் தொடர்பாக ஆரம்பம் தொடக்கம் தெரிவித்து வந்த முக்கிய விடயமாவது, சமூக ஊடகங்களில் அல்லது வேறு எந்த ஊடகங்கள் மூலம் உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயமாகும். விசேடமாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சுமார் 40 கொவிட் நோயாளர்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் விசேட செய்தியாக பதிவானதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளரினால் எமக்கு அறிவிக்கப்பட்டது. இதே போன்று சில ஊடகங்களினால் இந்த செய்தி வெளியிடப்பட்டதாகவும் இதன் காரணமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் எமது நாட்டின் பிள்ளைகளின் வருகை குறைவானதாக காணப்பட்டதாகவும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை வேறுவிதமாக பயன்படுத்தி இந்த உண்மைக்கு புறம்பான செய்தி உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணையை நடத்துவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது என்றார்.
இந்த வைத்தியசாலையில் எந்தவொரு கொவிட் நோயாளியும் இல்லை என்பதுடன் சிறுவர் நோயாளிகளின் சிகிச்சைக்காக வழமைப்போன்று எந்த சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலைக்கு வரமுடியும் என்றும் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதே போன்று இன்றைய தினத்தில் ஓய்வூதியக்காரர்களுக்கான ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்படடன. அத்தோடு நாம் விசேடமாக குறிப்பிடுவது என்னவெனில் இந்த நோய் தொடரபில் வைத்தியர்களின் நிலைப்பாட்டிற்கு வயதானோருக்கு இந்த நோய் தொற்றும் போக்கு அதிகமாகும்.

இதேபோன்று, ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக செல்வோருக்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் வழங்கப்படுவதில்லை. அத்தோடு இவர்களது அடையாள அட்டையை சமர்ப்பித்து தமது தேவை நிறைவேற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண மேலும் கூறினார்.
ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், கொவிட் நோயாளர்கள் - உண்மைக்குப்புறம்பான செய்தி, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், கொவிட் நோயாளர்கள் - உண்மைக்குப்புறம்பான செய்தி, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை Reviewed by Editor on April 03, 2020 Rating: 5