கோடி நன்றி!!!!!


(மருதமுனை நிஸா)

தர்மத்தை நினைவூட்டி
சேமிப்பை மறக்கடித்து
செல்வத்தை செலவு
செய்து இறைபாதையை
நினைவூட்டிய கொரோனாவே

பரந்த உள்ளங்கள்
மறைந்து கிடந்ததனை
திறந்து காட்டினாயே

காய் மனங்களை
கனிய வைத்து
ஏழைகளின் பசியை
புரிய வைத்தாயே

ஏழைப் பாணக்காரனையும்
பணக்கார ஏழையையும்
காட்டித் தந்தாயே

சுயரூபங்கள் பலவற்றை
சுயமாய் அறியும் வாய்ப்பை
சுலபமாய் காட்டித் தந்தாயே

ஓருலக வாழ்வே என்று
இவ்வுலகை கட்டி ஆண்ட
அரக்கர்களுக்கு
ஈருலக வாழ்வு பற்றி
புரிய வைத்து
மறுமையை நினைவு படுத்தினாயே

ஆறடி நிலம் மறந்து
ஓரடி நிலத்திற்காய்
மாரடித்த மா மேதைகளுக்கு
ஆறடி நினைவு பற்றி
மட்டுமே சிந்திக்க வைத்தாயே

நடு நிசி என்று பாராது
Bபிசியாக இருந்த மனிசங்களை
யோசிக்க வைத்தாயே

உயராத கரங்களை
உயர்த்த வைத்தாய்
குறைவாய் இருந்த
இறை சிந்தனையை
நிறைவாய் மாற்றினாய்

இரத்த உறவுகளை
ஒன்று சேர்த்தாய்
அன்பை கூட்டி உறவை
பலப்படுத்தினாய்
கோடி நன்றி கொரோனா உனக்கு

கோடி நன்றி!!!!!  கோடி நன்றி!!!!! Reviewed by Editor on April 03, 2020 Rating: 5