யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை



(றிஸ்வான் சாலிஹூ)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (02) வியாழக்கிழமை கொரோனா தொற்றக்குள்ளானவர்கள் என்று சந்தேகத்திற்கிடமான முறையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆறு பேரினதும் இரத்த மாதிரி பரிசோதனை இன்று (03) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செய்யப்பட்டது.

எனினும், ஆய்வுகூட பரிசோதனையின் முடிவின் படி அந்த ஆறு பேருக்கும் கொரோனா  வைரஸ் தொற்று இல்லை என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை Reviewed by Editor on April 03, 2020 Rating: 5