அம்பாரை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது



(றிஸ்வான் சாலிஹூ)

அரசாங்கத்தால் தற்போதைய கொரோனா அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்ட காலத்தின் போது அம்பாரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றது.




அந்த வகையில் இன்று (03) அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை,ஒலுவில், நிந்தவூர்,காரைதீவு,சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் மக்கள் அரசினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊடரங்கு சட்டத்திற்கு மதிப்பளித்து, முப்படையினருக்கும் ஒத்துழைப்பை வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.






இதேவேளை விவசாயிகள் தங்களுடைய விவசாய வேலைகளை எந்தவித தங்கு தடையும் இன்றி செய்வதோடு, இப்பிரதேசங்களில் தனியார் மருந்தகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அம்பாரை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது அம்பாரை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது Reviewed by Editor on April 03, 2020 Rating: 5