ஒருவரின் பிறப்பு அல்லது இறப்பு சான்றிதழை அது நிகழ்ந்து மூன்று மாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியும். அதனால் எந்தவிதமான சட்ட சிக்கலும் ஏற்படாது.
தற்பொழுது நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பொழுது அதிகளவான மக்கள் வைத்திய சாலைக்கு வந்து பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற முயற்சிக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டியதாகும். எனவே இதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல் இது.
"வைத்தியசாலையில் தங்களது பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை மேற்கொள்வோர் இப்பதிவினை 90 நாட்களுக்குள் மேற்கொள்ள முடியும் என்பதால், நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண நிலைமை காரணமாக இப் பதிவினை மேற்கொள்ள ஒருவர் மட்டும் வருமாறு பிறப்பு இறப்பு பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு 0776219933 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்."
தகவல்-
DR.Vishnu Sivapatham
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவது சம்பந்தமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அறிவித்தல்
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
