கொரோனா ஊரடங்கில் Endoscopy ஆல் ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்கள்



(பி.எம்.எம்.ஏ.காதர்)

பொது மக்களின்  கவயீனச் செயற்பாடுகள் காரனமாக  சுகாதாரத்துறையின் கட்டுப்பாடுகளையும் மீறி மக்களைக் காப்பாற்ற வேண்டியிருப்பதனால் மக்கள் பாதுகாப்பாகவும்,அவதானமாகவும் நடந்து கொள்ளுமாறு பணிவாய் கேட்டுக் கொள்கின்றேன் என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யு.எம்.சமீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது –

இன்றைய சூழ்நிலையில் இருநூற்றுக்கு மேற்பட்ட நாடுகளை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது இதுவரைக்கும் உலகலாவிய ரீதியில் 168 வைத்திய துறை உத்தியோகத்தர்களைக் காவு கொண்டிருக்கும்  நிலையில் எமது இலங்கை நாட்டிலும் ஊரடங்குச் சட்டங்களை அமுல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கின்றது.

காற்றின் மூலமும் தொடுகை மூலமும்  பரவக்கூடிய சுவாசப் பையை நாராக்கி உயிரை குடிக்கும் இக் கொடிய நோயானது சன நெரிசலைத் தடுப்பதன் மூலமும் அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுவதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக் கூடங்கள் குளிரூட்டப்பட்டு மூடிய தொகுதியாகக் காணப்படுவதால் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதைத் தவிர்ப்பதற்காக காத்திருந்து செய்யும் சத்திரசிகிச்சைகள் (Elective Surgeries) நிறுத்தப்பட்டு அவசரமாக செய்ய வேண்டிய சத்திரசிகிச்சைகள் (Emergency Surgeries) மட்டும் ஆபத்தை எதிர்நோக்கி செய்யப்படுகின்றது.அதிலும் வாயூடாக குழாய்விட்டு செய்யப்படும் Endoscopy மூலம் இவ் வைரஸ் பரவும் ஆபத்து அதிகமாகக் காணப்படுவதால் இக்காலத்தில் Endoscopy யை நிறுத்தி வைக்கப்படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

நமது மக்கள் இவ் Endoscopy யையும் அவசரமாக செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்துவது  எமக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.   Stay at Home,  Work at Home என்றெல்லாம் மக்களை கூடவிடாது வீட்டிலே இருக்கும் நிலையில் மக்களின் கவயீனமான செயல் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களை பேராபத்துக்குள்ளாக்குகின்றது.

சிறு பிள்ளைகள் பூட்டூசி,  நாணயக் குற்றிகளையும் , பெரியவர்கள் கட்டுப்பற்களை விழுங்கி வரும்போது  Covid 19 அச்சுறுத்தலுக்காக செய்ய வேண்டாமென நிறுத்தப்பட்டுள்ள Endoscopyயை செய்ய வேண்டி ஏற்படுவதால் நாங்கள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளோம்.  கல்முனை அஷ்ரப் ஞாபகார்ந்த வைத்தியசாலையில் கடந்த (05-04-2020)ஞாயிற்றுக்கிழமை விடுமுறையென்றும் பாராது கட்டுப் பல் விழுங்கிய நிலையிலும் பூட்டூசியை விழுங்கிய நிலையிலும் வந்த நோயாளிகளை Endoscopy மூலம் விழுங்கப்பட்ட பொருட்கள் மீற்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

மக்களே!  அவதானமாக இருங்கள். தங்களின் கவயீனச் செயற்பாடுகள் சுகாதரத்துறையின் கட்டுப்பாடுகளையும் மீறி தங்களை காப்பாற்ற வேண்டியிருப்பதனால் பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு பணிவாய் வேண்டுகின்றேன். "கொரோனாவை வெல்வது எல்லோரினதும் கடமை"என அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் Endoscopy ஆல் ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்கள் கொரோனா ஊரடங்கில் Endoscopy ஆல் ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்கள் Reviewed by Editor on April 07, 2020 Rating: 5