கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு மற்றும் அடுத்த கட்டம் தொடர்பான திட்டமிடல், ஜனாதிபதி தலைமையில்!!!!


கொவிட் 19 கொரோனா நோய்த்தொற்று நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான  கலந்துரையாடல் இன்று (04) சனிக்கிழமை ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய  நோய்க்கிருமியின் உலகளாவிய பரவல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.

நாட்டினுள் நோய்க்கிருமித் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே எமது அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த பெரும் சுகாதாரப் பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய எம்மால் முடியுமாக இருந்ததாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

எமது அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று, நோய்க்கிருமியை ஒழிக்கத் தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

நோயின் உலகளாவிய பரவலைக் கண்காணித்து உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாகத் தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தொற்றுக்குள்ளானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு மற்றும் அடுத்த கட்டம் தொடர்பான திட்டமிடல், ஜனாதிபதி தலைமையில்!!!! கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் மீளாய்வு மற்றும் அடுத்த கட்டம் தொடர்பான திட்டமிடல், ஜனாதிபதி தலைமையில்!!!! Reviewed by Editor on April 04, 2020 Rating: 5