(றிஸ்வான் சாலிஹூ)
இன்று (28) செவ்வாய்க்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேலையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்றைய அன்றாட செயற்பாடுகள் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். காதர் தலைமையில் பரிசோதிக்கப்பட்டது.
இந்த செயற்பாடு இன்று காலை
அக்கரைப்பற்று பஸ் நிலையம், அரச காரியாலயங்கள், மீன் விற்பனை நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றும் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இடம்பெற்றது.
இன்றைய தினம் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சனக்கூட்டம் குறைந்தும்,
மக்கள் சமூக இடைவெளி பேணியும்,
மாஸ்க் அணிந்திருந்தும் காணப்பட்டார்கள்.
இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்கள் போன்றோர் இந்த செயற்திட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் சமூக இடைவெளி பேணப்பட்டது
Reviewed by Editor
on
April 28, 2020
Rating:
Reviewed by Editor
on
April 28, 2020
Rating:






