அக்கரைப்பற்றில் கடந்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளம் காணப்பட்டு சுகம் பெற்ற இருவரும் தமது வீட்டுக்கு சுகம் பெற்று வருகை தந்துள்ளார்கள்.
தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்கள் தொற்று நோய் தடுப்பு செயற்பாட்டிற்கு அமைவாக ஏப்ரல் 28 முதல் மே 11 ஆம் திகதி வரை 14 நாட்கள் கட்டாய தனிமைப் படுத்தலுக்கு உட்பட வேண்டுமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என இனங்காணப்பட்ட இருவரின் நேரடித் தொடர்பினைப் பேணி வந்தவர்கள் ஒன்பது பேர் இன்னும் தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வருகின்றனர்.
இவர்களின் வருகையை தொடர்ந்து அக்கரைப்பற்று -19ஆம் பிரிவு இன்று (29) காலை கிருமி நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது விடுவிக்கப்பட்டது (Unlock) என்று அந்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் ஜனாப். ஏ.ஜே.சாஜீத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்தவர்கள் வீடு திரும்ப, அந்த பகுதியும் விடுவிக்கப்பட்டது...
Reviewed by Editor
on
April 29, 2020
Rating:
Reviewed by Editor
on
April 29, 2020
Rating:


