சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை இன்றிலிருந்து ஒன்லைன் முறையில்


இம்முறை சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேறுகளை பாடசாலைகளுக்கு ஒன்லைன் (online) முறையில் அனுப்புவதற்கு கல்வி அமைச்சினால் பரீட்சைத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியதன் படி அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதற்குரிய (User Name) பயனர் பெயர் மற்றும் (Password) கடவூச்சொல்லை பெற்றுக்கொடுக்கும் அங்குராரப்பண வைபவம் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் பரீட்சைத் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்றது.

நாட்டில் தற்போது தோன்றியூள்ள சமகால நிலவரத்தில் அனைத்து சவால்களுக்கும் எவ்வித பயமுமின்றி முகம் கொடுத்து இந்தப் பரீட்சைப் பெறுபேற்றை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சித்த பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்து பணியாளர் குழுவினருக்கும் அதற்கு தலைமை வகித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அவர்களுக்கும் கல்வி அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk என்பதில் நுழைந்து மாணவர்களுக்கு தமது பெறுபேற்றை தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இதற்கு முன்னான சந்தர்ப்பங்களில் தபால் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட பாடசாலை பரீட்சை பெறுபேற்று அட்டவணைகளை இன்று தொடக்கம் இந்த இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வீட்டில் இருந்து இயங்குதல் என்ற எண்ணக்கருவூக்கு செயல்பாட்டு பெறுமதியை சேர்த்து பரீட்சைத் திணைக்கள தொழிநுட்ப அலுவலர்களினால் ஒன்லைன் முறையில் பரீட்சை சான்றிதழ் மற்றும் பெறுபேற்று அட்டவணையை பெற்றுக்கொள்வதற்கும் பெறுபேற்றை பகுப்பாய்வூ செய்வதற்கும் வசதியளிக்குமாறு பரீட்சைத் திணைக்களத்தின் இணையத் தளத்தின் சேவை வசதியை விரிவூபடுத்த மேற்கொண்ட நடவடிக்கை இதன் போது கல்வி அமைச்சரின் விசேட பாராட்டுக்கு உட்படுத்தப்பட்டது.

சேவை முறைமைகள் ஐந்தின் கீழ் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு பாடசாலை அதிபர்களுக்கு மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு பெறுபேற்று அட்டவணையைப் PDF மற்றும் Excel வடிவங்களில் பெற்றுக் கொடுப்பதற்காக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நுழையூம் இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை விரிவூபடுத்துவதனூடாக அந்த வசதியை அண்மைப்படுத்துவதற்கான தேசியத் தேவை நிலவூவதால் இத்தகைய காலகட்டத்தில் அதனூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய உதவி மிகவூம் இன்றியமையாததென அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த் பிரேமதிலக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை இன்றிலிருந்து ஒன்லைன் முறையில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை  இன்றிலிருந்து ஒன்லைன் முறையில் Reviewed by Editor on April 30, 2020 Rating: 5