பிரதமர் இளைஞர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்


(றிஸ்வான் சாலிஹூ)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றை அடுத்து நாடு முழுவதும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இளைஞர்கள், யுவதிகள், மற்றும் அரச தனியார் ஊழியர்கள் பலர் வீடுகளிலேயே முடக்கப்பட்டிருக்கிறார்கள்‌.

இதனையடுத்து சில இளைஞர்கள் வீதிக்கு வருகிறார்கள். வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இச்சூழ்நிலையில், பொது மக்கள் ஓய்வு நேரத்தினை சரியாக பயன்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், புத்தகங்களை படித்தல், வீட்டு வேலைகளை செய்தல், பெற்றோருடன் நேரத்தை செலவு செய்தல், வீடுகளை அழகுபடுத்தல் உட்பட பல வேலைகளை செய்வதோடு, இச்சூழலில் பொது மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரு சவாலையும் விடுத்திருக்கிறார்.

அது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவானது,

வீட்டுத் தோட்ட சவாலில் பங்கேற்பதில் எனது மனைவி ஷிராந்தியும் நானும் பெருமகிழ்ச்சியடைகிறோம். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகைப் பெருமளவில் பாதித்துள்ள அதே நேரத்தில், எமது எதிர்காலச் சந்ததிகளுக்காக நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் இது கற்றுக்கொடுத்துள்ளது. அனைவரையும் தத்தமது பங்கை இவ்விடயத்தில் நிறைவேற்றுமாறு நான் ஊக்குவிக்கிறேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இளைஞர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் பிரதமர் இளைஞர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் Reviewed by Editor on April 04, 2020 Rating: 5