ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது


(றிஸ்வான் சாலிஹூ)

தற்போதைய நாட்டு நிலைமையில் பல்வேறு இடர்பாடுகளையும் கடந்து ஊடகப் பணிகளை முன்னடுத்துவரும் தேசிய ஜக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் (நுஜா) ஊடக அமைப்பின் அங்கத்தவர்களுக்கு மயோன் பவுண்டேசன் அமைப்பினால் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (16) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
நுஜா ஊடக அமைப்பின் தலைவரும், களம் பெஸ்ட் செய்தி இணையத்தளத்தின் நிர்வாகப் பணிப்பாளருமான எஸ்.எம்.அறூஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்கள் சுமார் 40 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மயோன் பவுண்டேசனின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ரிஜா பாறூக், றிம்சான் பாறூக் மற்றும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நிவாரணப் பொருட்களையும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைத்தனர்.

அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அரூஸ் அங்கு உரையாற்றுகையில்-

ஊடகவியலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதில் நுஜா ஊடக அமைப்பு கடந்த 16 வருடங்களாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. ஊடகவியலாளர்களின் நலன் சார்ந்த விடயங்களில் முடியுமான வரை உதவியும் புரிந்து வருகின்றோம். அத்தோடு தமது ஊடக அமைப்பின் அங்கத்தவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த மயோன் பவுண்டேசன் நிர்வாகத்தினருக்கு நுஜா அமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் சிரேஸ்ட பிரதித்தலைவர் எஸ்.எல்.எம்.அபூபக்கர், உபதலைவர் எஸ்.எல்.மன்சூர், செயலாளர் சலீம் றமீஸ் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Editor on April 17, 2020 Rating: 5