முப்பெரும் துறைகள்


(மருதமுனை நிஸா)

வைத்திய துறை
காவல் துறை
ஊடகத் துறை
முப்பெரும் துறைகளாம் இவை
இப் பெரும் துயர் துடைக்க
தலைதெறிக்க
ஓடிக்கொண்டிருக்கின்றன

தேசத்தை தேயவிடாது
தோளில் வைத்து
தேரிழுக்கின்றனவே
தேகமெலாம் சிலிர்க்கிறதே
தேயும் இப் பெரும்
துறைகளை யெண்ணி

தாயக தரணியிலே
ஓயாத அலையாக
மாய்கின்றனவே
வாய் திறந்து வர்ணிக்க
வார்த்தையில்லை என் வசம்

எம் முயிர் காக்க
தம் முயிர் பொருட்டில்லாது
அடுத்த உயிராவது
காப்பாற்ற தடுத்து நிறுத்தற்
போராட்டம் பண்ணி
மருந்தோடு மாய்கின்றது
வைத்திய துறை யது

துயில் துறந்து
பக லிரவாய் பறந்து
கடின உழைப்பாய் இருந்து
எமை காக்க
காக்கியிலே வீதியில்
காவல் துறை யது

இல்லத்திலே அமர்ந்து
உள்ளதை பகிர்ந்து
கேலியும் கிண்டலுமாய்
நாட் கழிக்கும் எமக்கு
இருந்த இடம் தேடி
இல்லம் நாடி
எம துள்ளங்கைகளுக்கு
உள்ளதை உள்ளபடி
தகவலை திரட்டி
உண்மை நிலை யறிந்து
உடனுக்குடன் தகவல் தரவென
வெய்யிலில் வேகுகிறது
ஊடகத் துறை யது

முப்பெரும் துறை யென
சாதுவாய் சொல்லி விட்டு
கை கா(க)ட்டி மறைய என்னால்
முடியாது

உயிரைப் பணயம் வைத்து
பயணிக்கிறன இத்துறைகள்
இத் துறைகள் என்ன
இயந்திரமா சொல்லுங்கள்
அதுவும் உயிர் உடல் கொண்ட
பிறவிகள்தானே
எம் போல
குடும்பம் பிள்ளைகள் என்று
வாழ வேண்டிய ஜீவன்கள் தானே
நிம்மதியாக எமை உறங்க
வைக்க நிம்மதியிழந்து
நிற்கின்ற மா துறைகளவை

ஒத்துழைப்போம் நாமும்

முப்பெரும் துறைகள் முப்பெரும் துறைகள் Reviewed by Editor on April 17, 2020 Rating: 5