தேசிய உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகமானது, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சமுத்திரவியல் சார் துறைகளில் கௌரவ இளமாணிப் பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும்.
இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டக்குளிப் பிரதேசத்தில் இயங்கும் இந்த பல்கலைக்கழகமானது மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக தனது கல்விச் சேவையை வழங்கி வருகிறது. சமுத்திரவியல் துறை என்பது இப்போது மட்டுமல்ல எப்போதும் பிரபல்யம் வாய்ந்த துறையாகவே காணப்படுகிறது.
2020/2021ஆம் ஆண்டிற்கான மாணவர்களுக்காக ஆறாவதாக புதியதொரு கற்கைநெறியும் இப் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகத்தினால் 2020/2021கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. அந்தவகையில் "2019-A/L" சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கூடிய கற்கைநெறிகள் தொடர்பான விளக்கங்களும் தகைமைகளும் பின்வருமாறு.
(இக்கற்கைநெறிகள் அனைத்தும் முற்றிலும் இலவசம்)
1) Bsc.in Fisheries and Marine Science (General/Honors)
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பாடப்பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று படங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
2) Bsc.in Marine Engineering (Honors)
i. Sea Based
ii. Shore Based
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்களின் தேர்வு நடைபெறும்.
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி ஒரே தடவையில் ஆகக் குறைந்தது "2C, S" சித்திகளை பெற்றிருத்தல் வேண்டும். (இணைந்த கணிதம், பெளதீகவியல், இரசாயனவியல் உள்ளடங்கலாக) இந்த மாணவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
3) Bsc.in Oceanography (Honors)
பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் (z-score) அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் / பௌதீக விஞ்ஞானம் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
4) Bsc.in Maritime Transportation Management and Logistics (Honors)
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
உளச்சார்புப் பரீட்சையின்(Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யயப்படுவர்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
5) Bsc.in Coastal and Marine Resources Management. (General/Honors)
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தோற்றி ஒரே தடவையில் மூன்று பாடங்களிலும் ஆகக்குறைந்தது "S" சித்தியைப்பெற்றிருத்தல் வேண்டும்.
உளச்சார்புப் பரீட்சையின்(Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யயப்படுவர்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
6) B-Tech in Aquaculture and Sea Food Technology(General)
இத்துறை சார்ந்த (Aquaculture /Food Technology) NVQ-5 ஆம் மட்ட சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
(அல்லது )
2019 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் உயிரியல் தொழினுட்பவியல் துறையில் தோற்றி மூன்று பாடங்களிலும் ஒரே தடவையில் ஆகக்குறைந்தது "S" சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
உளச்சார்பு பரீட்சையின் (Aptitude test) அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் .
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் C சித்தி/ க.பொ.த. உயர் தர பொது ஆங்கிலத்தில் S சித்தியை பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் யாவும் இணையத்தின் மூலமாக சமர்ப்பிக்கப் படல் வேண்டும். (Online apply)
உங்கள் விண்ணப்பங்களை பின்வரும் இணையத்தளத்தின் வாயிலாக சமர்ப்பிக்க முடியும்-
http://www.ocu.ac.lk/News/Intake.aspx
விண்ணப்ப முடிவுத்திகதி- 30/05/2020
(ஒரு மாணவர் மூன்று கற்கை நெறிகளுக்கு விருப்பு மற்றும் தகைமைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க முடியும். )
பல்கலைக்கழக பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
Reviewed by Editor
on
April 21, 2020
Rating:
Reviewed by Editor
on
April 21, 2020
Rating: