இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதனைத் தடுப்பதற்கான பல வழிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகின்ற அனைத்து பயணிகளையும் தற்காலிகமாக இலங்கை அரசு நிறுத்தி வைத்திருக்கின்றது என்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது-
இலங்கை அரசின் இந்நடவடிக்கைக்கு புலம்பெயர்தொழிலாளர்கள் அனைவரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் தாம் இருக்கின்ற நாடுகளின் அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து கொள்ளுமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உங்கள் அனைவரையும் வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சி பூரணமாகியதும் இலங்கைக்கு திரும்பும் உங்களது வேண்டுகோள்களை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். மேலும் ஏதேனும் தேவைகள் இருப்பின் குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களை தொடர்பு கொள்ளுமாறும் பணிக்கின்றோம். இது தொடர்பாக நீங்கள் வழங்குகின்ற இவ்வொத்துழைப்புக்களை நாங்கள் மதிப்பதோடு தேவையற்ற பீதிகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களிடம் ஓர் வேண்டுகோள்
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
Reviewed by Editor
on
April 26, 2020
Rating: