பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் கேகாலை மாவட்ட பிரதானி, சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஆர்.ரீ. ரேனபான அவர்களின் செயற்பாட்டின் கீழ் எம்.டீ.எம். பிரேம்நாத், கே.ஜீ.ஜீ.கே. ஜயவிக்ரம ஆகிய புலனாய்வு உத்தியோகத்தர்களினால் ஹெம்மாதகம மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் நேற்று (10) நடாத்தப்பட்ட சோதனைகளின் போது அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாவனையாளர் அதிகார சபையின் கட்டுப்பட்டு விலையை விட அதிக விலைக்கு பருப்பு, பெரிய வெங்காயம் என்பவற்றை விற்பனை செய்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகவே இந்த சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மாவனல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வியாபார நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:

