(றிஸ்வான் சாலிஹூ)
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காலத்தில் சகல மக்களும் வீட்டிலே தங்கி இருப்பதனால் மக்களின் நீர்ப் பாவனை வழமைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான நீர் போதாமல் இருப்பதனால், இன்னும் மேலதிக நீரை கரையோர மாவட்ட மக்களுக்கு கொண்டு வருவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பிரதம பொறியியலாளர் எம்.ரீ.ஏ.பாவா தலைமையில் குழு நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று (11) சனிக்கிழமை காலை முகாமையாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட அந்த குழுவினர் அக்கரைப்பற்று ஆலம்குளம் பகுதியில் உள்ள நீர் வரும் பாரிய குழாய் வழிகளை சுத்தம் செய்தும், வருகின்ற நீரின் அளவை விட இன்னும் கூடுதலான அளவு நீரை அதிகரிப்பதற்கான வழி வகைகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மேலதிக நீரை கொண்டு வருவதற்கான வேலைப்பாடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து, அதன் மூலம் கரையோர பகுதி மக்களுக்கு எந்தவித தடையுமின்றி நீர் வழங்கலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், இந்த காலத்தில் முடியுமான வரை நீர்ப்பாவனையார்கள் தங்களுக்குரிய நீரை சிக்கனமாகவும், கட்டாயம் நீர்த்தாங்கிகளை தங்களது வீடுகளில் வைத்து நீரை சேமித்து பாவிக்குமாறும், அக்கரைப்பற்று முகாமையாளர் நீர்ப்பாவனையாளர்களை கேட்டுக் கொள்கின்றார்.
அக்கரைப்பற்று முகாமையாளர் எந்திரி. எம்.ரீ.ஏ.பாவா தலைமையில் இயந்திரப் பொறியாளர் எந்திரி. ரீ.வினாயகமூர்த்தி, அக்கரைப்பற்று நீர் வழங்கல் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்.சஹீம், பொறியியல் உதவியாளர் ஜனாப்.நிஹார்டீன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக நீரை கொண்டு வர முகாமையாளரின் தலைமையில் அதிரடி நடவடிக்கை
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:




