நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வழிமுறை


நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான புதிய முறைகளை தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபை   அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, நீர்கட்டணப் பட்டியலை தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் www.waterboard.lk எனும் இணையத்தள பக்கத்தில் அல்லது கையடக்கத் தொலைபேசி விண்ணப்பத்தின் மூலம் செலுத்த முடியுமென சபை தெரிவித்துள்ளது.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் நீர் பாவனையாளர்கள் தங்களின் நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் வருமானம் இன்றி தொடர்ந்தும் நீரை வழங்குவது தேசிய நீர் வழங்கள்வடிகாலமைப்புச் சபை சவாலாக அமைந்துள்ளது என இந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இணையத்தளத்தை பயன்படுத்தி நிதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இணைய வங்கி சேவைகள் ஊடாக நீர் கட்டணத்தை செலுத்த முடியும் எனவும் சபை மக்களை கேட்டுள்ளது.

தங்களுடைய நீர்ப் பாவனை தொகையை கண்டறிய, நீர் கட்டண பட்டியல் இலக்கத்தை 0719399999 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதன் ஊடக மாதாந்த நீர் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வழிமுறை நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வழிமுறை Reviewed by Editor on April 20, 2020 Rating: 5