தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது



(றிஸ்வான் சாலிஹூ)

நேற்று (18) ஜனாதிபதி ஊடகப் பிரிவினரால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இணங்க, அரச அலுவலகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் காரியாலயங்கள் திறக்கப்படவுள்ளது.



அதனடிப்படையில் அக்கரைப்பற்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம், முகாமையாளர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய ஊழியர்களால் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.



தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது Reviewed by Editor on April 19, 2020 Rating: 5