யுத்த கால தாக்குதல்களில் சிக்கி பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
தன்னீருற்று மேற்கு முள்ளியவளையை சேர்ந்த கெங்காதரன் பவதாரனி இவர் கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தின் போது தனது முள்ளந்தண்டு பகுதியில் காயமடைந்து அன்றில் இருந்து தனது வாழ்க்கையை சக்கரநாற்காலியுடனே வாழ்ந்து வந்த இவர் இப்பரீட்சையில் 8A,B பெறுபேற்றையும், நாவலர் வீதி முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த மதியழகன் விதுர்சிகா இதே நிலைமையுடன் 6A,B,2C பெறுபேற்றை பெற்று கல்விக்கு ஊனம் ஒருபோதும் தடையில்லை என்பதனை ஏனைய மாணவர்களுக்கு மத்தியில் நிரூபித்துக்காட்டியுள்ளனர்.
இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள் என்பதோடு, இவரை பல சமூகத்தினரும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் இவர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஊனம் கல்விக்கு ஒரு தடையில்லை
Reviewed by Editor
on
April 29, 2020
Rating:
Reviewed by Editor
on
April 29, 2020
Rating:
