(அன்சப் அரீஜ் - உயிரியல் மருத்துவ பொறியியல்துறை மாணவன்)
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு மேலதிகமாக 2ம் நிலையில் தட்டுப்பாடாக உள்ளவைகளே இந்த Ventilatorகள். இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்காலத்தில் ventilator களின் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதை கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு ஆயுட்காலம் முடிந்த மற்றும் பழுதடைந்த Ventilator களை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பிரிவினருடன் இணைந்து திருத்தியமைத்தனர்.
அதே நேரம் Alibaba நிறுவனத்தின் தலைவர் Jackma கூட இலங்கை போன்ற நாடுகளுக்கு Ventilator உட்பட சில மருத்துவ உதவிகளை வழங்கியிருந்தார். தற்போது வல்லரசு நாடுகள் கூட ventilator களுக்கும் corona வை எதிர்க்ககூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய Hydroxy chloroquine என்ற மருந்திற்கும் சண்டை பிடித்துக்கொள்கின்றனர்.
இதற்கு காரணம் என்ன? Ventilator களின் பயன்பாடு மற்றும் தொழிற்பாட்டு பின்னணியினை பார்க்கலாம்...
Ventilator களை செயற்கை நுரையீரல் என அழைக்கலாம். இவை பொதுவாக ICU வாட்டு தொகுதிகள் மற்றும் Operation Theater களில் காணப்படும். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் மொத்தமாக 500 ICU கட்டில்களே இருப்பதாகவும் மொத்த தேவைப்பாட்டின் அடிப்படையில் 48% ஆன Ventilator களே இருப்பதாகவும் அறியக் கிடைத்தது. (உறுதிப்படுத்தப்படவில்லை)
Ventilator கள் பொதுவாக சுவாசிக்க சிரமப்படும் நோயாளிகள் மீதே அதன் பயன்பாடு அதிகமாக காணப்படும்.
இது Positive Pressure Device ஆக அல்லது Negative Pressure Device ஆக தொழிற்படும். அதாவது சுவாசத்தினை உள்ளெடுக்க சிரமப்படும் நோயாளிகளில் Positive Pressure Device ஆகவும் வெளிச்சுவாசத்தினை வெளியிட சிரமப்படும் நோயாளிகளில் Negative Pressure Device ஆகவும் தொழிற்படும். நோயாளிகளின் ஆரம்ப கால தேவைகளின் பொறுத்து முதலில் manual மூலமாக இயக்கக்கூடிய Bag valve mask கள் மூலமாக செயற்கை சுவாசம் வழங்கப்படும். இவை கைகளால் external pressure மூலம் காற்றினை உள்ளெடுக்க உதவும். பெரும்பாலும் வைத்திய தாதிகளின் மூலமாகவே மேற்கொள்ளப்படும். தொடர்ந்தும் செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்கள் ventilator device மூலமாக வழங்கப்படுவர்.
இவை அறையிலுள்ள காற்றினை மட்டும் அல்லது machine உடன் இணைக்கப்பட்ட oxygen cylinderல் உள்ள oxygen இனை குறிப்பிட்ட விகிதத்தில் கலப்பதன் மூலம் ventilator களில் காணப்படும் turbine கள் மூலமாக சுவாசப்பை வழியில் உள்ள அமுக்கத்திற்கு மேலதிகமான அமுக்கத்தினை வழங்குவதன் மூலம் செயற்கை சுவாசத்தினை வழங்கலாம். தொடர்ந்து உட்சுவாசத்தினை வழங்குவது ஆபத்தானது. ஆகவே ventilator களில் காணப்படும் pressure balancing sensorகள் மற்றும் micro processor கள் மூலம் உட்சுவாசம் நிறுத்தப்படும். ஆணில் Inspiratory capacity அண்ணளவாக 3.8L களும் பெண்களில் இது 2.4L களாகவும் காணப்படும். இதனை அண்மிக்கும் போது உட்சுவாசம் நிறுத்தப்படும். பின்னர் சுயாதீன அமுக்க வேறுபாட்டின் காரணமாக வெளிச்சுவாசம் நடைபெறும். இதுவே ventilator களின் அடிப்படை தத்துவமாகும்.
Operation Theaterகளில் Ventilator கள் General Anesthesia வின் போதே பயன்படும். Surgery ற்கு உட்படுத்தப்படும் நபர் முழுமையான மயக்க நிலைக்கு உட்படுத்தப்படும் போது சுயாதீன முச்சுவிடுதல் சாத்தியமற்றது. காரணம் Anesthesia செய்யப்பட்டால் அனைத்து தசைப்படைகளும் தற்காலிகமாக செயற்பாட்டை இழந்து விறைத்துவிடும். இது உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தில் பங்குகொள்ளும் தசைகளையும் தாக்குவதால் சுவாசம் நிறுத்தப்படும். இதனை தவிர்க்கவே மேம்படுத்தப்பட்ட Anesthesia machineகளுடன் Ventilator களும் இணைக்கப்பட்டிருக்கும். இது செயற்கை மூச்சு விடுதலை ஆரம்பித்து நோயாளியின் நிலைமையை சீராக பேண உதவும்.
Corona virus குடும்பமானது சுவாசவழிப்பாதையினை தாக்கக்கூடியது. அதே போன்றுதான் SARS-CoV-2 வைரசின் கூர்ப்பினால் உருவான Covid-19 வைரசும் சுவாச வழிப்பாதையை தாக்கும். சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறினால் இவற்றின் தாக்கம் சுவாசப்பை சிற்றறை வரை செல்லும். சுவாசப்பையினை ஈரலிப்பாக்கவும் வழுவழுப்புத்தன்மையை அதிகரிக்கவும் இயற்கையில் சீதம் (சளி) சுரக்கும்.அதாவது சைக்கிளில் கிறீஸ் பயன்படுவது போல. அப்போதே சுவாசத்தின் போது நுரையீரல்கள் சுருங்கவும் விரியவும் இலகுவாய் அமையும்.
இந்த வைரசுக்கள் சிற்றறையினை தாக்கும் போது சமநிலை குழப்பமடைந்து இயல்பான சீதம் சுரத்தலை விட அதிகமான சுரத்தல் நிகழ்வதால் சுவாசப்பாதை தடைப்படலாம். இதனால் மூச்சு விடுதலை சிரமமாக அமையும். இதனை நிவர்த்தி செய்ய ventilator கள் தேவைப்படும். இது சுவாச உள்ளெடுத்தலில் உள்ள சிரமத்தின் காரணமாக ஏற்படும் மரணத்தினை தவிர்க்க பேருதவியாக அமையலாம். இதுவே இன்றைய காலகட்டத்தில் ventilator கள் அதிகமாக தேவைப்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்று குறிப்பிடலாம்.
தற்கால நிலைமையில் Ventilator களின் பங்கு!!!
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
