(றிசாத் ஏ காதர்)
அக்கரைப்பற்று சுவார்ட் நிருவனத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கொவிட் -19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு உலர் உணவுப் பொதிகளுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடல்தேற்றி மருந்துப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுனனின் வழிகாட்டுதலில் மாவட்டம் முழுவதும் இவ் ஆயுர்வேத மருந்துப்பொதிகள் வழங்கிவைக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் சுவார்ட் நிறுவன தவிசாளர் வ.பரமசிங்கம், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.பீ.எம்.றஜீஸ் , திருக்கோவில் ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஐ.எல்.அப்துல் ஹை மற்றம் சர்வ மத பேரவை, அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தலைவருமான ஐ.எல்.ஹாசிம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் சுவார்ட் நிறுவன தவிசாளர் திரு.வ.பரமசிங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் குறித்த மருந்துப்பொதிகளை பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார்.
தெரிவு செய்யப்பட்ட 100பயனாளர்களுக்கான உணவுப்பொதிகள் அட்டாளைச்சேனை 08ம் பிரிவில் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவார்ட் நிருவனத்தினால் 100பயனாளர்களுக்கான உணவுப்பொதிகள் வழங்கல்
Reviewed by Editor
on
May 17, 2020
Rating:
