இந்தியாவின், கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து இன்று (07) ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 6 மற்றும் 7வது யூனிட்டிற்கு இடையே உள்ள, இழுவை இயந்திரம் மூலம் கொண்டு வரப்பட்ட நிலக்கரியானது மின் உற்பத்திக்காக தீயூட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லும் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 2 என்எல்சி நிரந்தர பணியாளர்கள் மற்றும் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். தற்போது விபத்து ஏற்பட்டதையடுத்து, அனல் மின் நிலையம் முழுவதும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலாவது அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் இழுவை இயந்திரத்தில் தீப்பிடித்து எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறை தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து, 8 பேர் படுகாயம்
Reviewed by Editor
on
May 07, 2020
Rating:
