கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் பூரண சுகமடைந்த 55 பேர் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தலைமையில் இவர்களை வழியனுப்பி வைக்கும் வைபவத்தில் மட்டக்களப்பு கல்லடி 231 படைப்பிரிவின் பிரிகேடியர் பல்லேகும்புர மற்றும் கட்டளை அதிகாரி மேஜர் எஹெலபொல, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட இராணுவ உயரதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுகம் பெற்று வீடு செல்லும் குடும்பத்தினருக்கு காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் ஏற்பாட்டில் பழங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், ஊழியர்கள், இராணுவத்தினர்,பொலிசார்,காத்தான்குடி மக்கள் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் சுகமடைந்து வீடு செல்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பண்டாரநாயக்க மாவத்தை, ஜா-எல, பேருவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வீடு திரும்பினர்
Reviewed by Editor
on
May 10, 2020
Rating:
